Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலக்கல் ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை! இளைஞர்களை கவர்ந்த கூட்டணி - படபூஜை புகைப்படங்கள் இதோ

நிமிர்ந்து நில் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த மலையாள ஹீரோயின் பார்வதி நாயர். பின் என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் என சில படங்களில் நடித்து வந்தார்.

அதே போல நடிகர் வைபவ் சரோஜா, கோவா, ஈசன், மங்காத்தா என தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சென்னை 28, மேயாத மான் படங்கள் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.

அண்மைகாலமாக அவர் லவ், ரொமான்ஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார். இதில் அண்மையில் வந்த சிக்ஸர் படம் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. அடுத்ததாக ஆர்.கே.நகர், காட்டேரி, லாக்கப் என பல படங்கள் கையில் இருக்கின்றன. இந்நிலையில் தற்போது அவர் ஆலம்பனா என்ற படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். பாரி விஜய் இப்படத்தை இயக்க ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார். இதன் படபூஜை இன்று நடைபெற்றது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, நடிகர் ஆனந்த் ராஜ் ஆகியோரும் இணைந்துள்ளார்கள்.கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது.