Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகர் வீட்டில் வெடிகுண்டு பீதி.. நடிகரின் குடும்பத்தை வெளியேற்றிய போலீஸ்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் இன்னும் 2 மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மும்பை போலீசுக்கு மர்ம நபர் ஒருவர் ஈமெயில் அனுப்பியுள்ளனர்.

அதை பார்த்து அதிர்ச்சியான மும்பை போலீஸ் சல்மான் கான் வீட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களை உடனே வெளியேற்றி வெடிகுண்டு நிபுணர்களை வைத்து சோதனை நடத்தியுள்ளனர். அந்த சமயத்தில் சல்மான் கான் வீட்டில் இல்லை.

நான்கு மணி நேரமாக அந்த அபார்ட்மெண்ட் முழுவதும் சோதனை நடத்தியுள்ளனர். பின்னர் தான் அந்த ஈமெயில் பொய்யாக அனுப்பப்பட்டது என்று.

அதை அனுப்பிய நபரை ட்ராக் செய்த போலீஸ் உத்தர பிரதேசத்தின் காசியாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். நீதிமன்றத்தில் அவரை juvenile courtல் ஆஜர்படுத்தி போலீசார் சார்ஜ் ஷீட் சமர்ப்பித்துள்ளனர். அதன் பிறகு எச்சரித்து அவரை அனுப்பியுள்ளனர்.