Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓடும் ட்ராக்டரில் நடிகர் சூரியின் ஸ்டண்ட்! நாமெல்லாம் விவசாயினு காலர தூக்கி விட்டு திரியனும்..

சூரி தமிழ் சினிமாவில் டாப் காமெடியன்களில் ஒருவர். அவர் ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கிறார் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் தான் வந்தது.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சூரி ஹோட்டல் வைத்தும் நடத்தி வருகிறார். இது ஒருபுறமிருக்க நடிகர் சூரி தனக்கு விவசாயத்தில் இருக்கும் ஆர்வத்தை ஒரு வீடியோ வெளியிட்டு பதிவு செய்துள்ளார்.

"படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்ல... பயிரிடுறவனும் கடவுள் தான்.. நாமெல்லாம் விவசாயினு காலர தூக்கி விட்டு திரியனும்.." என கடைக்குட்டி சிங்கம் படத்தில் வரும் ஒரு வசனத்தை அவர் டப்ஸ்மாஷ் செய்துள்ளார்.

சூரி அந்த வீடியோவில் ஓடும் ட்ராக்ட்டரில் ஏறி ஸ்டண்ட் செய்துள்ளார்.