Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெற்றி, தோல்வியை எப்படி பார்க்க வேண்டும் என்று அஜித்திடம் தான் கற்றேன், முன்னணி மலையாள நடிகர் ஓபன் டாக்

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களும் சேர்த்து தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ 200 கோடி வசூல் வந்துள்ளது.

ஒரே வருடத்தில் இவ்வளவு வசூலை கொடுத்த நடிகர் அஜித் தான், அதே நேரத்தில் அஜித் தன் வாழ்க்கையில் சந்திக்காத தோல்விகளே இல்லை.

இந்நிலையில் மலையாளத்தில் கொடிக்கட்டி பறக்கும் முன்னணி நடிகர் ப்ரித்விராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித்திடம் சில வருடங்களுக்கு முன்பு நான் இரண்டு மணி நேரம் பேசியிருப்பேன்.

அப்போது அவர் தன் வெற்றியையும், தோல்வியையும் எப்படி கையாள்கின்றார் என்பதை பார்த்து வியந்தேன், அது எனக்கு ஒரு பாடமாக இருந்தது’ என கூறியுள்ளார்.