Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாற்று திறனாளி ரசிகருக்கு நடிகர் மகேஷ் பாபு செய்த விஷயம், இணையத்தில் வைரலாகும் வீடியோ

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் என்றால் அது மகேஷ் பாபு தான். இவரது சிறந்த நடிப்பினால் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது இவரின் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் படம் தான் Sarileru Neekevvaru என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மகேஷ் பாபு தனது ரசிகர்களை நேரில் சந்திப்பதற்கு நிகழ்வு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் நடிகர் மகேஷ் பாபுவை மாற்று திறனாளி ரசிகர் ஒருவர் சந்திக்க வந்துள்ளார் அப்போது தான் பெரிய நடிகர் என்பதை எல்லாம் தள்ளி வைத்து விட்டு சக மனிதனாக அவரை கட்டி தழுவி தனது மனிதநேயத்தையும் தன் ரசிகருக்கு அன்பையும் காட்டினார்.

மேலும், இந்த வீடியோ ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.