Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் மீடியாவை சுத்தமாக தவிர்ப்பது இதனால்தான்- தல சொன்னதை கூறிய பிரபலம்

அஜித் தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் இப்படியும் இருக்கலாம் என தனி வழியை உருவாக்கியவர். பேட்டிகள் கொடுப்பது இல்லை, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.

இதற்காக அவர் மீது பல விமர்சனங்கள் வந்தாலும் சிலர் அவர் செய்வதும் சரியே என்று தான் இருக்கிறார்கள்.

அண்மையில் ஒரு பேட்டியில் தொகுப்பாளர் கோபிநாத் பேசும்போது, அஜித்தை ஒரு முறை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பேசிக் கொண்டிருக்கும் போது அஜித், மீடியா மீது எனக்கு பெரிய ஈடுபாடு இல்லை.

ஆரம்பத்தில் எனக்கு தமிழ் சரியாக வராது, அதற்கு கிண்டல் செய்தார்கள், எப்படி பேச வேண்டும் என்று கேட்க எனக்கு அப்போது யாரையும் தெரியாது. சரி ஆங்கிலத்தில் பேசுவோம் என்று பேசினால் தமிழ் நடிகர் என்ன ஆங்கிலம் என்றார்கள்.

பின் ஏன் பேச வேண்டும் என்று அமைதியாக இருந்தால் இவர் பெரிய நடிகரா இப்படி இருக்கிறார் என்று எழுதினார்கள். எது செய்தாலும் குற்றம் கூறுகிறார்கள் என்று தான் நான் அமைதியாகிவிட்டேன் என்று கூறியதாக கோபிநாத் பேட்டியில் கூறியுள்ளார்.