டோலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன். இவருக்கும் சினிமா வர்த்தக வட்டாரத்தில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அதே போல ஓப்பனிங்கும் சிறப்பாக இருக்கும்.
அந்த வகையில் கடந்த 12 ம் தேதி அவரின் நடிப்பில் அல வைகுந்தபுரம்லு படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபில் நல்ல வசூல் சாதனை செய்தது. தமிழ் சினிமாவிலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் அஜித், விஜய், சூர்யா, ரஜினி படங்களின் இயக்குனர் முருகதாஸ் அல்லு அர்ஜூன் படத்தை இயக்கப்போவதாக சொல்லப்பட்டு வந்தது.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில் முருகதாஸூடன் பணியாற்றி விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதனால் இருவரும் இணைந்துள்ள செய்தி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.