Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்தில் பாதியில் எழுந்து வந்திருக்கிறேன், மேடையில் பேசும்முன் தனுஷ் கூறியது.. சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட பவன்

சமீபத்தில் அசுரன் பட வெற்றி விழாவில் பேசும்போது நடிகர் பவன் விஜய்யின் குருவி படத்தை நக்கல் செய்யும் விதமாக பேசியிருந்தது பெரிய சர்ச்சையானது.

பலரும் இது பற்றி பேசிவரும் நிலையில் நடிகர் பவன் தற்போது விஜய்யிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் "நான் பொதுவாக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் என்னை பேசவைக்க வேண்டாம் என கூறுவேன். நான் படத்தின் பெயரை கூறி பேசியது தவறுதான். அசுரன் 100 நாள் என்பதால் தான் அதை குறிப்பிட்டேன். விஜய் பற்றி தனியாளாக குறிப்பிட்டு அதை கூறவில்லை. நான் வேண்டுமென்றே கூறவில்லை. அதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என பவன் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் "நடிகர் விஜய்யிடமே நேரில் பல விஷயங்களை கூறியிருக்கிறேன். உங்கள் சில படங்களை எனக்கு பிடிக்கவில்லை. நான் பாதியில் எழுந்து வந்திருக்கிறேன் என அவரிடமே கூறியிருக்கிறேன். அசுரன் விழாவில் பேசும்முன்பே தனுஷ் சொல்லித்தான் அனுப்பினார்.. 'இவர் பேசினாலே டேஞ்சர் ஆகுமே' என சொன்னார். அசுரன் பிரஸ் மீட்டில் பேசும்போது 'கெட்ட வார்த்தை எதுவும் பேசிடாதீங்க' என சொல்லித்தான் அனுப்பினார் தனுஷ் என பவன் கூறியுள்ளார்.