Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிக்ஸ் பேக்ஸ் வைத்து மிரட்டிய விஷ்ணு, வலிகளில் இருந்து மீண்டு வந்த தருணம்

தமிழில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இதன்பின் ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

மேலும் 2018ஆம் ஆண்டு வெளிவந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வாழ்க்கையிலும் தனது உடம்பிலும் காயங்கள் இருந்ததால் தான் எனக்கு இந்த இடைவேளை தேவைப்பட்டது என்று கூறி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணு.