Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் ஹீரோ ஆவார் என்று நினைத்து கூட பார்க்க வில்லை, உண்மையை உடைத்த விஜய்யின் சித்தி

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கியமான நடிகராக மாறிவிட்டார்.

இவரை பற்றி பேட்டிகளில் புகழ்ந்து பேசாத ஆட்களே இல்லை.

அந்த வகையில் தற்போது நடிகர் விக்ராந்தின் அம்மா மற்றும் விஜய்யின் சித்தியுமான ஷீலா அவர்கள் அண்மையில் தான் அளித்த பேட்டியில் "விஜய் அவர்களின் ஆரம்பகட்டத்தில் நான் அவர் ஒரு ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்க்கவில்லை, ஏன் அவருடைய பெற்றோர்களே எதிர்பார்க்கவில்லை" என்று கூறினார்.

மேலும் "திரையுலகில் அவர் வரும் பொழுதே அவர் திறமையோடும் நல்ல எண்ணத்தோடும், தன்னம்பிக்கையோடும் தான் வந்தார் அந்த நல்ல எண்ணம் தான் அவரை இந்த நிலமைக்கு கொண்டு போய் சேர்த்தது" என்று கூறினார்.