Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சைக்கு நடுவே சூப்பர் ரஜினிக்காக களத்தில் இறங்கிய பிரபலங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் துக்ளக் பத்திரிக்கை விழா பேசிய கருத்துக்களை தற்போது எதிர்கட்சியினர் அரசியலாக்கி எதிர்த்து வருவதோடு ரஜினிக்கு மிரட்டல் விட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் ரஜினி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி ரஜினியின் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது, யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்துவது தவறு என்பதை ரஜினி வெளிப்படுத்தியிருக்கிறார், அவருக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் அரசியல் பிரமுகர் சுப்பிரமணிய சுவாமி பெரியார் குறித்த கருத்துக்கான வழக்கில் ரஜினி விரும்பினால் வாதாடத் தயார், 1971 பேரணியின் போது ராமர், சீதை உருவச்சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டன என கூறியுள்ளார்.