Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படத்திற்காக 100 கிலோ எடை ஏற்றும் பிரபல நடிகர்- இதுவரை எவ்வளவு ஏற்றியுள்ளார் தெரியுமா?

படத்திற்காக தன்னை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் எண்ணம் நடிகர்களுக்கு வந்துவிட்டது. சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர் அசோக் செல்வன்.

இவரது நடிப்பில் வரும் பிப்ரவரி 14ம் தேதி ஓ மை கடவுளே என்ற படம் வெளியாக இருக்கிறது.

தற்போது இவர் அறிமுக இயக்குனர் அனி சசி இயக்கத்தில் தெலுங்கில் புதிய படத்தில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்காக அசோக் செல்வன் 100 கிலோ வரை எடையை ஏற்ற இருக்கிறாராம்.

தற்போது 20 கிலோ ஏற்றியுள்ள அவர் கடுமையாக உடல் ஏற்றும் வேலையில் இருக்கிறாராம். இதில் நாயகிகளாக நித்யா மேனன் மற்றும் ரிது வர்மா நடிக்கிறார்களாம்.