Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகர் நிதினுக்கு திருமணம்.. பிரம்மாண்ட ஏற்பாடு! பெண் யார் தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நிதின். அவருக்கு வரும் ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துபாயில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு மிக முக்கிய விஐபிக்கள் மட்டுமே அழைக்கப்படுகிறார்களாம். சுமார் 50 முதல் 60 பேருக்கு மட்டுமே ஏப்ரல் 16 நடக்கும் திருமணத்தில் கலந்துகொள்கின்றனர் என கூறப்படுகிறது.

ஷாலினி என்ற பெண்ணை தான் நிதின் மனக்கவுள்ளார். பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் தான் என்றாலும் நிதின்-ஷாலினி இருவரும் கடந்த நான்கு வருடங்களாக பழகி வருகிறார்களாம். ஆகவே இது arranged கம் லவ் மேரேஜ்.

இது ஒருபுறமிருக்க நிதின் மற்றும் ரஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள பீஷ்மா படம் பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது எனபது குறிப்பிடத்தக்கது.