Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பற்றி விஜய்யும், விஜய்யை பற்றி அஜித்தும் பிரபல நடிகரிடம் கேட்ட விஷயம்

அஜித்-விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். ரஜினியை அடுத்து சினிமாவிற்கு இவர்கள் படங்கள் தான் அதிக வசூலை எடுத்து வருகிறது.

அண்மையில் அஜித், விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து யோகி பாபு பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது சர்கார் படப்பிடிப்பை முடித்து விஸ்வாசம் ஷுட்டிங் சென்றேன். அஜித் அவர்கள் எப்படி இருக்கிறீர்கள் என்ன படம் நடித்துவிட்டு வருகிறீர்கள் என்றார். நான் விஜய்யின் சர்கார் முடித்து வருகிறேன் என்றதும் தல அவர்கள் விஜய் சார் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தார்.

மீண்டும் விஸ்வாசம் முடித்து சர்காருக்கு வந்தபோது விஜய் எங்கே வண்டி சென்றுவிட்டு வருகிறது என்று ஜாலியாக கேட்டார்.

நான் ஹைதராபாத் விஸ்வாசம் சென்றேன் என்றதும் அவரும் அஜித் சார் எப்படி இருக்கிறார் என்று நலம் விசாரித்தார்.

இருவருமே ஒருவருக்கொருவர் நண்பர்களாக தான் உள்ளார்கள், இது நிஜமாக நடந்த விஷயம் என கூறியுள்ளார்.