Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த சித்தி 2 சீரியல் ! முக்கிய தகவல் வெளியானது

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள சித்தி 2 சீரியல் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்குகிறது. ராதிகா சரத்குமார் நடித்து தயாரித்துள்ள இந்த சீரியலின் இரண்டாம் பாகம் 19 வருடங்கள் கழித்து வெளியாகிறது.

இந்த சீரியலில் பொன்வண்ணன், மகாலட்சுமி, சமுத்திரகனி, பாக்யராஜ் என பலர் நடித்துள்ளனர். இந்த சீரியலை ரசிகர்கள் பலரும் மறுபடியும் டிவியில் எதிர்பார்த்துள்ளனர்.

இதில் சாரதாவாக வரும் ராதிகாவின் கணவராக நடித்துள்ள பொன்வண்ணன் எல்லோருக்கும் நல்லது நடக்கவேண்டும் என நினைப்பவராம். குடும்பம் தான் அவருக்கு உயிராம் என கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.