Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ரஜினிக்கு காயம், பாதியில் நிறுத்தப்பட்ட Man vs Wild ஷூட்டிங்! ரசிகர்கள் அதிர்ச்சி

சிவா இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இன்று ரஜினி பியர் க்ரில்ஸ் உடன் 'மேன் vs வைல்டு' என்ற ஷோவில் பங்கேற்றார்.

இதன் ஷூட்டிங் இன்று கர்நாடகாவின் பந்திப்பூர் காப்பகத்தில் நடைபெற்றது. ஆனால் ஷூட்டிங்கில் ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. ரஜினி நலமாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

நாளை ஷூட்டிங் நடத்த அனுமதி இல்லை. 28 மற்றும் 30ம் தேதி ஆறு மணி நேரம் ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று ரஜினியுடன் ஷூட்டிங் நடத்திவிட்டு 30ம் தேதி நடிகர் அக்ஷய் குமார் உடன் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

மேலும் விதியை மீறி drone கேமரா பயன்படுத்திய குழுவினரிடம் விளக்கம் கேட்டுள்ளதாம் பந்திப்பூர் காப்பக நிர்வாகம்.