Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லாம் டிஆர்பி-காக தான் செய்தார் தர்ஷன்.. அவருக்கு நெருக்கமான முக்கிய பிரபலம் கூறியது

பிக்பாஸ் தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி இருவரும் தங்கள் சண்டையை போலீஸ் மாற்று மீடியா வரை கொண்டுவந்துள்ளனர். நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக புகார் கூறியிருந்தார் சனம். தர்ஷனும் இன்று இது பற்றி பேட்டி கொடுத்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நெருக்கமான பிக்பாஸ் 2 ரம்யா அளித்துள்ள பேட்டியில் "தர்ஷன்-சனம் இடையே பிக்பாஸ் முன்பே அடிக்கடி பிரச்சனைகள் நடக்கும். ஒருமுறை சனம் ஷெட்டி தர்ஷனின் போனை போட்டு சுக்கு நூறாக உடைத்துவிட்டார். அடிக்கடி நாங்கள் தான் சென்று சமரசம் செய்துள்ளோம்" என கூறியுள்ளார்.

மேலும் பேசிய ரம்யாவின் கணவர் சத்யா "பிக்பாஸ் வீட்டுக்குள் மற்ற பெண்களுடன் அவர் flirt செய்தது எல்லாம் TRPகாக தான் என்பது எனக்கு தெரியும். ஆனால் அதற்காக சனம் ஷெட்டி சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார். அவர்கள் இருவரும் ஓவர் பொசசிவ், அது தான் இவ்வளவு பிரச்சனைக்கு காரணம்" என கூறியுள்ளார்.