Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாடகராக மாறிய ரோபோ ஷங்கர், எந்த படத்தில் தெரியுமா

தொலைக்காட்சியில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் ரோபோ ஷங்கர்.

இவர் தற்போது விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களுடன் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன் முறையாக கன்னி மாடம் எனும் படத்திற்காக மூணு கால் வாகனம் என்ற பாடலை பாடி கொடுத்துள்ளாராம்.

மேலும் இப்பாடலுக்கு ஆட்டோ அந்தேம் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.