Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்கள் பற்றி ட்விட்டரில் பிரமிப்புடன் பதிவிட்ட பிரபல இயக்குனர்

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. அவர் ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவது வழக்கமான ஒன்று தான்.

தற்போது மாஸ்டர் பட ஷூட்டிங்கிலும் அது தான் நடந்துவருகிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடந்து வருகிறது ஷூட்டிங். படப்பிடிப்பு முடிந்து விஜய் வெளியில் வரும் போது அவரை பார்ப்பதற்காக பெரிய கூட்டம் கூடுகிறது.

இதன் விடியோவை பார்த்துவிட்டு பிரபல இயக்குனர் ரத்ன குமார் ட்விட்டரில் பிரமிப்புடன் பதிவிட்டுள்ளார். "எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே ! உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே❤️" என அவர் ட்விட் செய்துள்ளார்.