Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டும்! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்! அதிரவைத்த பேச்சு - யார் அது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவ்வப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசி வரும் முக்கிய விஷயங்கள் தொடர்ந்து எதிர்கட்சிகளால் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.

அதே வேளையில் ரஜினி எதிர்ப்புகளையும் பொறுமையாக எதிர்கொண்டு வருகிறார். அண்மையில் அவர் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக தர்பார் படம் வெளியானது.

அதே வேளையில் படம் நஷ்டம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்நிலையில் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த நடிகர் டி ராஜேந்தர் ரஜினி நடித்த தர்பார் திரைப்படத்தை வாங்கியதற்காக இதுதான் இவர்கள் தரும் பரிசா? விநியோகஸ்தர்களை காப்பாற்ற முடியாதவர்கள் தமிழ்நாட்டையா காப்பாற்ற போகிறார்கள்? என விமர்சித்துள்ளார்.

அத்துடன் ரஜினி நடிப்போடு நிறுத்திக்கொள்வது நல்லது; நாட்டில் எத்தனை மாநிலங்கள் இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாது; பட்ஜெட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதும் அவருக்கு தெரியாது என மார்க்சிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.