Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர், நடிகையின் மகனுக்கு கல்யாணம்! மணப்பெண் இவர் தான் - பிரபலங்கள் குவிந்தனர்

சினிமா பிரபலங்களின் திருமண நிகழ்வு பலரும் எதிர்பார்க்கும் ஒன்று. மேலும் அது கூடுதல் கவனத்தை பெறுவதும் உண்டு. வாழ்த்துக்களும் குவியும்.

அவ்வகையில் தற்போது தமிழ், மலையாள சினிமாவின் பிரபலங்களான நடிகர் ஜெயா பாரதி, நடிகர் சதார் தம்பதியின் மகன் கிருஷ் திருமணம் நடைபெற்றுள்ளது. சதார் கடந்த 2019 ல் காலமானார்.

அவரின் மகன் கிருஷ் மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இவர் Ladies and Gentleman, To Noora with Love,Malini 22 Palayamkottai ரீமேக், 22 Female Kottayam ரீமேக் ஆகியன இவரின் முக்கிய படங்கள்.

இந்நிலையில் கிருஷ் நபில் மற்றும் கமலேஷ்வரி தம்பதியின் மகள் சோனாலியை திருமணம் செய்துள்ளார். சென்னை ஐடிசி ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மம்முட்டி, சுரேஷ் கோபி, மேனகா, விதுபாலா, சுரேஷ் குமார் என பலர் கலந்துகொண்டனர்.