Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் சம்பளம் பற்றி பரவும் புது தகவல்! உண்மையா?

தர்பார் படம் நஷ்டம் எனவும் அதிக விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என கூறி சில நாட்களுக்கு முன்பு விநியோகஸ்தர்கள் சிலர் ரஜினி வீட்டுக்கு சென்று அவரிடம் பேச முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸ் அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் அடுத்து ரஜினி நடித்துவரும் 168வது படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடக்கிறது. தர்பார் நஷ்டம் என கூறப்படுவதால் இந்த 168வது படத்திற்கான சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது என செய்திகள் பரவி வருகிறது.

இதற்காக தயாரிப்பாளர் கோரிக்கையை ஏற்று ரஜினி சம்பளத்தை குறைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார் என முன்னணி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.