Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திற்கு நடந்தது மற்ற நடிகர்களுக்கு நடந்திருந்தால் இந்நேரம் காணாமல் போயிருப்பாங்க - பேரரசு ஓபன் டாக்

தமிழில் "திருப்பாச்சி" எனும் படத்தை இயக்கி தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பேரரசு.

இவர் விஜய்யை வைத்து இயக்கிய இரண்டு திரைப்படங்களும் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய "திருப்பதி" திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து நேர்காணல் ஒன்றில் அதிரடியாக பேசியுள்ளார்பேரரசு.

அதில் " நடிகர் அஜித் தொடர்ந்து ஐந்து வருடங்களாக தோல்வி படங்களையே கொடுத்துள்ளார். இது போன்று மற்ற நடிகர்களுக்கு நடந்திருந்தால் இன்னேரம் காணாமல் போயிருப்பார்கள், ஆனால் அவரின் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை, அடுத்த ஐந்து வருடங்கள் மீண்டும் வெற்றி படங்கள் கொடுத்த அஜித், தற்போது சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்" என இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்.