Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல இதை சொன்னாலே போதும்ங்க, ஹிப்ஹாப் ஆதி ஆசையை நிறைவேற்றுவாரா அஜித்!

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் நான் சிரித்தால் படம் நாளை உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் ஆதி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு வருகின்றார், அதில் அவர் பேசுகையில் ‘தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான நடிகர்கள் அனைவரும் என்னை பாராட்டி விட்டனர்.

இன்னும் தல அஜித்திடம் மட்டும் தான் என்னால் போகமுடியவில்லை, ஒருவேளை நான் சிரித்தால் பார்த்துவிட்டு, “அட நல்ல நடிச்சு இருக்கீங்க தம்பி” என்று அவர் சொன்னாலே போதும்’ என்று ஜாலியாக பேசியுள்ளார்.

ஆதி தற்போது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என்ற இரட்டை குதிரையில் வெற்றிகரமாக சவாரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

loading...