Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதை மட்டும் பண்ணாதீங்க, கஷ்டமா இருக்கு.. ஜெயம் ரவியிடம் ரசிகர்கள் கேட்டது

ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. சென்ற வருடம் வெளிவந்த கோமாளி படம் ரசிகர்கள் மத்தியில் ரவிக்கு மிக பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி சிறு வயது கதாபாத்திரத்திற்காக தனது எடையை குறைத்து கொண்டு நடித்திருப்பார்.

இதற்காக 2 மாதங்களுக்கும் மேலாக இவர் கஷ்டப்பட்டதாகவும் அண்மையில் விருது விழா ஒன்றில் தெரிவித்தார். அப்போது அந்த விழாவில் பேசிய ஜெயம் ரவி "நான் அந்த சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்ததை பார்த்துவிட்டு பலரும் என்னிடம் இனிமேல் இதை மட்டும் பண்ணாதீங்க எங்களுக்கு கஷ்டமா இருக்கு" என கூறியதாக வெளிப்படையாக தெரிவித்தார்.