தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கிமான நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவருடன் பணிபுரிந்து அதில் அவரிடம் இருந்து கற்று கொண்ட பல விஷயங்களை பிரபலங்கள் நேர்காணலில் கூறுவதை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் தற்போது பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையா அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் "நான் புலி பட படப்பிடிப்பின் போது அதிகாலை 5 மணிக்கு எழுந்து விடுவேன். ஆனால் எனக்கு முன்பே எழுந்து ஜாகிங் சென்று விட்டு வருவார் விஜய். ஏனென்றால் விஜய் அவர்களுக்கு ரசிகர்கள் தன்மேல் வைத்திருக்கும் அன்பு மற்றும் எதிர்பார்ப்பு என்ற பயம் தான் காரணம்" என்று வெளிப்படையாக கூறினார் தம்பி ராமையா.