Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு லைட் மேன் எப்படியோ அப்படி தான் விஜய், மாஸ்டர் பட நடிகர் ஓபன் டாக்

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார் தளபதி விஜய்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர் என்று நாம் அறிவோம்.

இப்படத்தில் விஜய்யுடன் நடிகர் சாந்தனுவும் முதன் முறையாக இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் இவர் அளித்த பேட்டியில் "விஜய் அண்ணா ஒரு ஷாட் முடிந்த பிறகு caravan-க்கு செல்ல மாட்டார். நாம் எப்படி ஒரு ஷாட் முடிந்ததும் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறோமோ அப்படி தான் இருப்பார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஒரு லைட் மேன் எப்படியோ அப்படித்தான் விஜய் செட்டில் இருப்பார்" என்று வெளிப்படையாக கூறினார் சாந்தனு.