Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர்..? வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

தமிழில் முதலில் ஒரு நடிகனாக அறிமுகமாகி பாடலாசிரியர் ஆனபின்பு இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அருண்ராஜா காமராஜ்.

இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல் ஆசிரியராக பணிபுரிந்ததை நாம் அறிவோம். குறிப்பாக விஜய், ரஜினி, தனுஷ் போன்ற பல நடிகர்களுடன் பணிபுரிந்துள்ளார்.

மேலும் அண்மை காலமாக இவர் தளபதி விஜய் அவர்களுக்கு படம் பண்ண போவதாக தகவல்கள் வெளிவந்திருந்தது. ஆனால் இதனை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய இவர் "அதற்கான டைம் வரும் போழுது கண்டிப்பாக நடக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் முன்னணி நடிகரான கார்த்தி அவர்களுக்கு ஒரு கதை கூறியுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

loading...