Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய கெட்டப்பில் மாஸ் காட்டும் அருண் விஜய்.. 'விக்டர் இஸ் பேக்' என கொண்டாடும் ரசிகர்கள்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியான திரைப்படம் "என்னை அறிந்தால்". அந்த படத்தில் நடிகர் அருண் விஜய் விக்டர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

அதன்பின் இவர் நடித்த குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம் போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது.

மேலும் தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாஃபியா' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இம்மாதம் வெளியாக உள்ள இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தனது கெட்டபை செஞ்சு செய்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் இதை கண்ட ரசிகர்கள் இது புதிதாக இவர் நடிக்கும் படத்திற்காக இருக்குமோ என்று சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் கமெண்டில் "விக்டர் இஸ் பேக்" என பதிவிட்டு வருகிறார்கள்.


loading...