Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை அறிந்தால் 2 பண்ணனும், பல ரகசியங்களை போட்டுடைத்த அருண் விஜய்

தமிழ் வெளிவந்த முறை மாப்பிள்ளை படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய்.

இதன் பின் சேரன் இயக்கத்தில் வெளிவந்த பாண்டவர் பூமி படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது என்று கூட கூறலாம்.

மேலும் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அருண் விஜய் அவர்கள் தமிழ் திரையுலகில் மிக சிறந்த இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அருண் விஜய் பேசும் போழுது "என் வாழ்வில் எனக்கு என் இரண்டு படங்களை பார்ட் 2 பண்ண வேண்டும். முதலில் தடையறத் தாக்க மற்றொன்று என்னை அறிந்தால் விக்டர் என்று கூறினார்.

மேலும் பேசிய அருண் விஜய் "என்னை அறிந்தால் படத்தில் விக்டரை சுட்டதை நீங்கள் யாரும் பார்க்க வில்லை விக்டர் இறந்தாரா இல்லையா, அங்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியாது. அஜித் சார் அதற்கான வாய்ப்புகள் கொடுத்தால் என்னை அறிந்தால் 2 எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று கூறினார்.

loading...