Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கணவனை இழந்து தவிக்கும் பெண்ணுக்கு நடிகர் விஜய் கொடுத்த நிதி உதவி, எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்துள்ளார் தளபதி விஜய்.

இவர் தனது ரசிகர்களை எந்த அளவிற்கு நேசிப்பார் என்பதனை நாம் அறிவோம். அதனை நாம் நேரில் கூட பார்த்து இருக்கிறோம்.

மேலும் இதனை அனிதா பிரச்சனையின் போதும், தூத்துகுடி துப்பாக்கி சுட்டின் போதும் விஜய் நேரில் சென்று தனது இரங்கலை தெரிவித்ததை நாம் பார்த்தோம்.

இந்நிலையில் விஜய்யின் பெயரில் மக்கள் மன்றம் நடந்து வருவதை நாம் அறிவோம். இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விஜய்யின் மக்கள் மன்றத்தில் பொறுப்பு வகித்து வந்த முருகன் எனும் நபர் இன்று உயிரிழந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட விஜய் உடனடியாக தனது மக்கள் மன்றம் சார்பில் கணவனை இழந்து தவிக்கும் தனது ரசிகரின் மனைவிக்கும் அவரது இரண்டு மகன்களுக்கும் ரூபாய் 50 ஆயிரம் நிதி உதவி செய்துள்ளார்.

loading...