Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதனால் விஜய்க்கு வளர்ச்சி தான் கிடைக்கும்.. தாக்கி பேசியவருக்கு முன்னணி இயக்குனர் பதிலடி

நடிகர் விஜய் பற்றி கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அவரது வீட்டில் திடீரென ஐடி ரெய்டு நடந்தது அரசியல் காரணங்களால் தான் என பலரும் கருத்துதெரிவித்தனர்.

அது பற்றி ஹிந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சம்பத் என்பவர் பேட்டி அளிக்கும்போது விஜய்யை Fraud என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இயக்குனர் அமீர் தற்போது பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது..

"அர்ஜுன் சம்பத் என்ற நபர் விஜய்யை Fraud என பல முறை சொல்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் உழைத்து சம்பாதித்து இந்த உயரத்தை தொட்டிருக்கிறார். அவரை Fraud என அழுத்திபலமுறை சொல்ல நெறியாளர் அனுமதித்திருக்க கூடாது. "

"இதுபோன்ற அச்சுறுத்தல்களால் விஜய் அவர்கள் வளர்ச்சி தான் அடைவாரே தவிர அவருக்கு setback எதுவும் இருக்காது" என அமீர் பேசியுள்ளார்.

loading...