Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தாலி அணியச்சொல்லி என கணவர் சொல்லவில்லை.. அது என் சாய்ஸ்! - ரகுமான் மகளுக்கு ஆதரவாக சின்மயி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா முகம் முழுவதும் மூடியபடி புர்கா அணிந்து இருப்பது பற்றி பிரபல எழுத்தாளர் ஒருவர் சர்ச்சையாக விமர்சித்திருந்தார். அதற்கு கதிஜாவும் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த சர்ச்சையில் தற்போது பாடகி சின்மயி கதிஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். "மிகவும் சிறிய உடையை அணியும் பெண்களை கண்டிப்பது/அசிங்கப்படுத்துவது போன்றது தான் இதுவும். புர்கா அணிவது கதீஜாவின் சொந்த விருப்பம்" என கூறியுள்ளார் அவர்.

அதற்கு ட்விட்டர் நபர் ஒருவர் தாலி பற்றி இவரிடம் கேள்வி கேட்க, கோபமான சின்மயி "தாலி அணியச்சொல்லி என் கணவரோ அவரது குடும்பத்தினரோ கூறவில்லை. நானே தான் விருப்பப்பட்டு அணிகிறேன். அது என் choice" என பதிலடி கொடுத்துள்ளார்.


loading...