Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் 'வலிமை' பற்றி பரவிய தவறான செய்தி! உண்மை இதுதான்

வலிமை ஷூட்டிங்கில் அஜித் சரியாக பங்கேற்பதில்லை என கடந்த சில நாட்களாக சில வலிமை படம் பற்றி சில தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் அது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

அஜித படத்தின் ஷூட்டிங்கில் மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்து வருகிறாராம். ஒரு ஸ்டண்ட் காட்சி எடுக்கும்போது அஜித்துக்கு அடிபட்ட நிலையில் இயக்குனர் வினோத் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு அஜித்தை ரெஸ்ட் எடுக்க சொல்லி கூறினாராம்.

ஆனால் அஜித் அந்த வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடிக்கிறேன் என கூறி அன்று நள்ளிரவு வரை நடித்தாராம்.

அதுமட்டுமின்றி மற்றொரு நாள் ஒரு சண்டை காட்சியில் ரிஸ்க் அதிகம் இருக்கிறது என கூறி டூப் பயன்படுத்தலாம் என ஸ்டண்ட் மாஸ்டர் தெரிவித்தாராம். ஆனால் அஜித் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம். "நான் தான் சம்பளம் வாங்கினேன். நான் தான் நடிப்பேன்" என கூறி அந்த ரிஸ்கான காட்சியில் நடித்தாராம்.