Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் மதமாற்றம் செய்கிறாரா? மன்னிப்பு கேட்க வேண்டும்! சர்ச்சையாக பேசிய பிரபலம்

விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் அவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தது பரப்பரப்பான செய்தியாக ஓடியது.

இது அரசியல் சர்ச்சையாகவும் எதிர்கட்சிகளால் பேசப்பட்டன. அதே வேளையில் விஜய்யின் பிகில் பட தயாரிப்பாளர், ஃபைனான்சியர் ஆகியோரிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் விஜய்யின் அப்பா சந்திரசேகர் செய்தி தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்டார். இதில் பேசிய அவரிடம் விஜய் மதமாற்றம் செய்கிறாரா என கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் விஜய் எல்லோரையும் கிறிஸ்தவனா என கேட்டு வேலை தருகிறேன் என சொன்னாரா? விஜய் மதமாற்றம் செய்ததற்கு ஆதாரம் காட்ட முடியுமா? நிரூபிக்க வேண்டும் இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பகிரங்கமாக பேசியுள்ளார்.

loading...