Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகர் தனுஷுக்கு கொலை மிரட்டல், இது தான் காரணமா?

தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் தரமான படங்களை கொடுக்கும் நடிகர்களில் தனுஷ் அவர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்.

அந்த வகையில் இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வருகிறது.

நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என கூறி கருணாஸ் அவர்களின் முக்குளதேவர் புலிப்படை அமைப்பு காவல் நிலையில் புகார் அளித்திருந்தது.

இதற்கு காரணத்தை தெரிவித்த அமைப்பு "இப்படம் 1991ஆம் ஆண்டு நடந்த கொடியங்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி உருவாகி வருவதாக திருநெல்வேலி மற்றும் தூத்துகுடி ஆகிய மாவட்டங்களில் நடந்து வரும் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி புகார் அளித்துள்ளனர்".

இந்நிலையில் தற்போது தனுஷ் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வாலிபர் ஒருவர் வாட்ஸப்பில் பேசியுள்ளார் "எங்கள் சமூகத்தை அவதூறாக பேசும் வகையில் படம் எடுத்தால் உன் தலை இருக்காது" என்று பேசியுள்ளாராம்.

இதனை குறித்து தற்போது அந்த வாலிபரை போலீஸ் தேடி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.