Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யோகிபாபுவை காதலித்த நடிகை, திருமணத்திற்காக அழுது வீடியோ, வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டார்!

யோகிபாபு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி காமெடி நடிகர். இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்துவிட்டார்.

இந்நிலையில் யோகிபாபு சமீபத்தில் தான் மஞ்சுபார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார், திரையுலகத்தினர் பலருக்கும் தெரியாமல் மிக எளிமையாக திருமணம் செய்தார்.

ஆனால், யோகிபாபுவிற்கு திருமணம் நடந்த நாள் துணை நடிகை சுஜி என்பவர், அழுது நான் யோகிபாபுவை ஒரு தலையாக காதலித்தேன் என அழுது டிக்டாக்-ல் வெளியிட்டுள்ளார்.

இதுக்குறித்து யோகிபாபு ‘அந்த நடிகை யார் என்றே தெரியாது, அவரை நேரில் கூட நான் பார்த்தது இல்லை, அவர் வீடியோக்களை வெளியிட்டு வருவதால் என் குடும்பம் மட்டுமின்றி அவர் குடும்பத்திற்கும் பிரச்சனை’ என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து அந்த நடிகை ‘நான் தெரியாமல் அப்படி பேசிவிட்டேன், மன்னித்து விடுங்கள்’ என்று மறுபடியும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

loading...