Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனர் இயக்கத்தில் விஜய், அஜித் இணைந்து நடிக்கவிருந்த படம் நின்றது, எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் விஜய், அஜித். தமிழகத்தில் இவர்கள் படங்களின் வசூலை இவர்களே மாறி மாறி உடைப்பார்கள்.

அந்த வகையில் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் பிஸியாக இருக்க, அஜித் வலிமை படப்பிடிப்பில் உள்ளார்.

இந்த இரண்டு படங்களின் மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க, என்ன வசூல் சாதனை செய்யும் என்பதை பார்ப்போம்.

சரி இது ஒரு புறம் இருக்க, விஜய், அஜித் இருவரும் ராஜாவின் பார்வையிலே படத்தில் மட்டும் தான் இணைந்து நடித்தார்கள்.

அதை தொடர்ந்து அவர்கள் எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை, நேருக்கு நேர் ஷுட்டிங் வரை சென்று படம் நின்றது.

ஆனால், ரோஜக்கூட்டம் படம் முதலில் விஜய், அஜித்தை வைத்து தான் சசி எடுப்பதாக இருந்தாராம்.

இதில் ஜெய் ஆகாஷ் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவிருந்தாராம், பிறகு தான் இப்படம் கைமாறியதாக ஜெய் ஆகாஷே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

loading...