Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண்களுக்கு பிரச்சனை என்றால் நான் வருவேன், செம மாஸாக பேசிய சிம்பு

தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலான நடிப்பினால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்தவருகிறார்.

இப்படத்தில் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் மிக சிறப்பான முறையில் பூஜையுடன் துவங்கியது.

மேலும் சமீபத்தில் பிரபல கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிம்பு, தான் ஏன் இத்தனை நாட்களாக பெரிதளவில் எந்த படமும் நடிக்கவில்லை என்பதையும் மற்றும் பல விஷயங்களையும் தனது ரசிகர்களிடம் மேடையில் நின்று பேசினார்.

இதில் தொடர்ந்து பேசும் போழுது "நான் பெண்களை திட்டி பாடுகிறேன் என்று சொல்லுகிறீர்கள், ஆனால் அந்த பெண்கள் தானே எனக்கு உறுதுணையாக துணை நிற்கிறார்கள். எனக்கு பெண்களை பிடிக்கும், நான் பெண்கள் மீது மிக பெரிய அன்பை வைத்திருக்கிறேன். அதனால் பெண்களுக்கு பிரச்சனை என்றால் நான் கண்டிப்பாக முதல் ஆளாக வந்து நிப்பேன்" என்று மேடையில் செம மாஸாக கூறினார்.