Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் இப்படி பட்டவரா? வெளிப்படையாக போட்டுடைத்த பிரபல நடிகை

நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்தியளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம்.

இப்படத்தை தொடர்ந்து இவர் சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக சில தகவல்கள் வெளியானது. இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்நிலையில் தளபதி விஜய்யுடன் சர்கார் படத்தில் இணைந்து நடித்த நடிகை துளசி அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் பேசிய போது "நான் விஜய்யுடன் இதற்கு முன்பே கில்லி படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரங்களால் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு சர்கார் படத்தில் தான் இணைந்து நடித்தோம். அப்போது அவர் என்னை மிகவும் அன்பாக கவனித்தார்".

மேலும் பேசிய இவர் "அவரை நான் விஜூமா என்று தான் அழைப்பேன். அவர் ஒரு தங்கமான மனிதர். அந்த கிளைமாக்ஸ் காட்சியை ஒரே டேக்கில் நடித்து முடித்தார்" என்று வெளிப்படையாக கூறினார்.

loading...