Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 100% அரசியலுக்கு..? விஜய்யிடம் பணிபுரிந்த நபர் போட்டுடைத்த உண்மை

தளபதி விஜய் தற்போது மிக விரைவாக தனது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க எக்ஸ்.பி கிரேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் முதன் முறையாக நடித்து வருகிறார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, அருஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்யிடம் அரமப கால கட்டத்தில் பி.ஆர்.ஓ வாக பணிபுரிந்த செல்வகுமார் என்பவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இதில் பேசிய இவர் "விஜய் அவர்களுக்கு அரசியலுக்கு வரணும் என்ற எண்ணம் இருக்கிறது. மற்றவர்களை மாதிரி சொல்லி சமாளிக்க கூடிய ஆள் கிடையாது விஜய். அவர் கண்டிப்பாக 100% அரசியலுக்கு வருவார். அவருக்கு கலப்படம் இல்லாத ஒரு அரசியல் தர வேண்டும் என்பது ஆசை" என்று வெளிப்படையாக கூறினார்.

loading...