Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி படத்தில் நடிக்கும் அஜித்..? எந்த படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா

தமிழ் சினிமாவில் எந்த விதமான பின் பலமும் இல்லாமல் முன்னணி நட்சத்திரங்களாக மாறியவர்கள் ரஜினி மற்றும் அஜித்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தற்போது அஜித் அவர்களின் நெருங்கிய நண்பர் மற்றும் இயக்குனருமான சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஸ், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். அண்மையில் கூட இப்படத்தின் டைட்டுளை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் தல அஜித் அவர்கள் சிறியதாக ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. ஏனென்றால் இப்படத்தை இயக்குவது சிறுத்தை சிவா, இப்படத்தை தயாரிப்பது சன் பிச்சர்ஸ். மேலும் அஜித்தின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக பேச்சு வார்த்தை போய் கொண்டு இருப்பதினால், இப்படத்தில் அஜித் ஒரு கேமியோ ரோலில் நடிப்பார் என்று தகவல்கள் பரவிவருகிறது.

ஆனால் இது மட்டும் நடந்தால் கண்டிப்பாக அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே செம்ம கொண்டாட்டம் தான்.

loading...