Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை இந்த மாதிரி கதாபாத்திரம் விஜய் பண்ணதில்லை, மாஸ்டர் பட நடிகர் வெளிப்படை பேச்சு

லோகேஷ் இயக்கத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் முதன் முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், நாகேந்திர பிரசாத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இது மட்டுமல்லாமல் யூடுயூப் நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் வேவேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மெர்வின் என்பவர் நடித்துள்ளார். இவர் அண்மையில் அளித்த பேட்டியில் "இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக இருக்கும். இப்படத்தில் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு விஜய்யை பார்க்கலாம். ஆம் இப்படத்தில் விஜய் ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்" என்று வெளிப்படையாக கூறினார்.

loading...