Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் மாறவே இல்லை, பிரபல நடிகர் வெளிப்படை பேச்சு

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வரும் நடிகர் தளபதி. இவர் தற்போது தனது மாஸ்டர் படத்தின் வேளைகளில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

இவரை பற்றி பலரும் புகழ்ந்து பேசி நாம் பார்த்திருப்போம். விஜய்யுடன் பணிபுரிந்ததை பற்றியும் நேர்காணலில் பிரபலங்கள் கூறுவதை நாம் கேட்டிருப்போம்.

அந்த வகையில் விஜய்யுடன் தலைவா படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர் திரு பொன்வண்ணன் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் "நான் விஜய்யுடன் கண்ணுக்குள் நிலவு எனும் படத்தில் இணைந்த நடித்திருந்தேன். அதற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த தலைவா படத்தில் தான் இணைந்து நடித்தேன். ஆனால் நான் அப்போது எப்படி பார்த்தேனோ அப்படியே தான் இப்போதும் விஜய் இருக்கிறார். அவர் மாறவே இல்லை" என்று வெளிப்படையாக கூறினார்.

loading...