Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி படத்தில் அஜித் பட நடிகர், யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் அண்ணாத்த.

இப்படத்தின் ரஜினி அவர்களுடன் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஸ், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

அண்மையில் தான் இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளிவந்தது. இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது என்று கூட கூறலாம்.

இந்நிலையில் இப்படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் வீரம் படத்தில் அஜித்துக்கு நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்திருந்த நடிகர் பாலா இப்படத்தில் நடித்து வருவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.