Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் எனக்கு இதை நிறைய பண்ணார், முன்னணி நடிகர் வெளிப்படை பேச்சு

தல அஜித் தற்போது எச்,வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் நீண்ட நாட்கள் கழித்து அஜித் அவர்கள் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் நவ்தீப் நடித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான திரு போனி கபூர் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது மேடையில் இவருக்கு விருது வழங்கிய மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி பேசும் பொழுது "எனக்கு அஜித் சார் மிகவும் பிடித்த ஒரு நபர், ப்ரேமம் படம் பார்த்து விட்டு அவர் என்னை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். அவர் என்னிடம் வாழ்க்கைக்கு தேவையான நிறைய அட்வைஸ் பண்ணார்" என்று வெளிப்படையாக கூறினார்.