Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் இப்படி தான், பிகில் பட நடிகை வெளிப்படை பேச்சு

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர்.

தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகளில் விஜய் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும் விஜய்யை பற்றி பலரும் புகழ்ந்து பேசியும், அவருடன் பணிபுரிந்ததை பற்றியும் பேசி நாம் கேட்டிருப்போம்.

அந்த வகையில் தற்போது விஜய்யுடன் பிகில் படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகை ரேபா மோனிகா ஜான் அண்மையில் அளித்த பேட்டியில், பிகில் படப்பிடிப்பின் போது நடந்த பல விதமான சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்றாக விஜய்யை பற்றி கூறினார், "விஜய் சார் கூட நடித்தது எனக்கு மிக பெரிய பெருமை. அவர் மிக அமைதியானவர், எப்போது எதையாவது யோசித்து கொண்டே தான் இருப்பார்" என்று வெளிப்படையாக கூறினார்.