Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, கமலுக்கு போட்டியாக அரசியலில் இறங்கும் பிரபல நடிகர்! சவாலான அதிரடி பேச்சு

உலக நாயகன் கமல்ஹாசன் படங்களின் மூலம் அரசியல் பேசிவந்ததோடு மட்டுமில்லாமல் தனியே மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தேர்தல் களத்தையும் பார்த்துவிட்டார். அடுத்த தேர்தலுக்கும் தயாராகி வருகிறார்.

அதே வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பணிகளும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் அவர் கட்சியை தொடங்குவார், 2021 ல் தேர்தலை சந்திப்பார் என்றும் எதிர்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் கோவையில் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன் அரசியல் ஈடுபாடுகள் சராசரி பிரஜைகள் எல்லோருக்கும் இருக்க வேண்டும். சினிமாவில் தன்னிறைவு அடைந்த பின்பே அரசியலுக்கு நிச்சயம் வருவேன்.

ரஜினி, கமல் இருவரும் இப்போது தான் அரசியலுக்கு வந்து பெரிய போராட்டக்களத்தில் இருக்கிறார்கள். இதற்கு நடுவில் நானும் போட்டியாக வரவேண்டாம் என நினைக்கிறேன்.

அரசியலை வைத்து அரசியல் செய்வது இப்போது அதிகமாகிவிட்டது. அதனால் புதிகாக நானும் குழப்பத்தை உருவாக்க வேண்டாம் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

loading...