Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல முன்னணி நடிகரின் படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. யார் படம், என்ன சொன்னார் தெரியுமா?

மெரினா என்ற படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக கால் பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இதன்பின் தனுஷுடன் இணைந்து 3 எனும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரை வைத்து தனது தயாரிப்பில் எதிர்நீச்சல் எனும் படத்தை தயாரித்து வெளியிட்டார் நடிகர் தனுஷ். இதனையடுத்து பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுக்க துவங்கினார் சிவா. சமீபத்தில் வெளிவந்த ஹீரோ படம் கூட இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பிரபல முன்னணி நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இப்படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருந்தது என்று கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சிவர்கார்த்திகேயன்.

மேலும் இந்த பதிவில் குறிப்பாக இயக்குனர் கவுதம் மேனன் அவரக்ளின் நடிப்பை பாராட்டி 'கடைசி சீன் சூப்பர் சார்' என்று பதிவிட்டுள்ளார்.