Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ஒரு குழந்தைங்க, எந்த மாஸ் ஹீரோவும் இதை செய்ய மாட்டாங்க, பிரபல நடிகை ஓபன் டாக்

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் தல என்று தலையில் வைத்து கொண்டாடுபவர் அஜித். இவர் தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார்.

அஜித்தின் கடைசி இரண்டு படங்களான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களும் மெகா ஹிட் ஆனது.

இதனால், வலிமை மூலம் எப்படியாவது ஹாட்ரிக் ஹிட் கொடுத்துவிட வேண்டும் என அஜித் முயற்சி செய்து வருகின்றார்.

இந்நிலையில் அஜித்துடன் கிரீடம் படத்தில் நடித்தவர் சரண்யா பொன்வன்னன், இவர் அஜித்தின் அம்மாவாக அந்த படத்தில் நடித்திருந்தார்.

அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார், அதில் ‘அஜித் ஒரு குழந்தைங்க.

அவ்வளவு தங்கமான மனிதர் அவர், எல்லோரிடத்திலும் அன்பாக பழகுபவர், நமக்காக வைத்திருக்கும் வசனம் எதுவாக இருந்தாலும் பேசுங்கள் என்று சொல்வார், இந்த வசனத்தையும் பேசுங்கள் என்று சேர்த்துக்க சொல்வார்.

எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை சொல்வார்களா? என்றால் சந்தேகம் தான், அஜித் அப்படி ஒரு அழகன்’ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.